தமிழ்நாடு

இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி செல்லும் மக்கள்... மயானத்திற்கு பாதை இல்லாததால் அவலம்... 

கடலூர் அருகே மயான வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை ஆற்றில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் பா. கொத்தனூர் கிராமத்தில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு என தனியாக மயானம் இல்லாததால், கோமுகி ஆற்றின் கரையோரம் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர். 

இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு கோமுகி ஆற்றின்  குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் சடலத்துடன் ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும் அவலத்தை பல ஆண்டுகளாக அனுபவத்து வருகின்றனர்.

இதனையடுத்து கிராம மக்கள் தங்களுக்கென தனி மயானம் அமைத்துக் கொடுத்து, ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.