ராமநாபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசாமி கோவில் அமைந்துள்ளது.
ஆடி, தை மாத அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வர ராமநாதசாமி கோவிலுக்கு வந்த அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது வழக்கம்.
இந்நிலையில் வார விடுமுறை மற்றும் ஆடி முதல் நாளையொட்டி வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி வருகின்றனர்.
அதன் பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்து 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.