தமிழ்நாடு

விடுமுறை ஓவர்; சென்னைக்கு படையெடுத்த மக்கள்...கடும் போக்குவரத்து நெரிசலால் அவதி!

Tamil Selvi Selvakumar

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

மிலாடி நபி மற்றும் வார இறுதி நாள் விடுமுறை அத்துடன் காந்தி ஜெயந்தி விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் அவர்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். 

இந்நிலையில் விடுமுறை முடிந்ததையடுத்து, அனைவரும் சென்னைக்கு வர தொடங்கியதால், சென்னையின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.