தமிழ்நாடு

ஊர் திரும்ப 3 மணி நேரமாக ரயில் நிலையத்தில் காத்திருந்த மக்கள் கூட்டம்..! எங்கு தெரியுமா?

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில் இல்லாததால் 3 மணி நேரமாக ரயில் நிலையத்தில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.

Tamil Selvi Selvakumar

இரண்டு ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் தான் கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் வைகாசி மகா பவுர்ணமிக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 700  அரசு சிறப்பு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் ரயிலை நம்பி ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சுமார் 3 மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்ட அவர்கள் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடி சென்ற பயணிகள் ரயிலில் முண்டியடித்து ஏறி, உட்கார இடமில்லாமல் நொந்தபடி பயணம் செய்தனர்.