"காவி எஜமானர்கள் Control-ல்.. முதலமைச்சரின் அடிமைத்தனத்தை..." - விஜய்யை விளாசிய உதயநிதி  AI Generated
தமிழ்நாடு

"காவி எஜமானர்கள் Control-ல்.. முதலமைச்சரின் அடிமைத்தனத்தை..." - விஜய்யை விளாசிய உதயநிதி

"பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?" - உதயநிதி கேள்வி

மாலை முரசு செய்தி குழு

தமிழக காவல்துறை பெரியார் பிறந்தநாளை ஒட்டிய பேரணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

"முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைச் செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை, அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும், ஆணவத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்