தமிழ்நாடு

கோவையில் பெரியார் சிலைக்கு   செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு!   

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Malaimurasu Seithigal TV

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் நீண்ட நாட்களாக திராவிடம், காவி இவர்களில் யார் பெரியவர் என்கிற மாதிரியான பேச்சுகளும், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிலைகளை உடைப்பதும்,காவி பொடி தூவுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகியும் இங்கு பேசு பொருளாக உள்ளார்.அவர் ஒரு சிலை அல்ல,சுயமரியாதைக்கும்,சமூக நீதிக்குமான பாதை என்றெல்லாம் பெரியாரின் தொண்டர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.   

இந்நிலையில் பெரியார் சிலை மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர்.இது தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.