periyar university  
தமிழ்நாடு

சாதிப் பெயரைச் சொல்லி இழிவுப்படுத்திய பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கம்!!

பேராசிரியர் பெரியசாமி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில் 19க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ...

மாலை முரசு செய்தி குழு

பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்து  தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத்தலைவர் முதுநிலைப் பேராசிரியர் பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் பெரியசாமி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில் 19க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வினை முடிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தியதாக புகார் எழுந்தது. தனக்கு வேண்டிய பேராசிரியர்களின் மாணவர்களுக்கு மட்டும் கையொப்பம் இடுவது, பிற பேராசிரியர்களின் மாணவர்களுக்குக் காலம் தாழ்த்துவது அல்லது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

இது தவிர, வகுப்பறையில் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுப்படுத்துவது, ஒருமையில் பேசுவது, மாணவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் மூவர் குழு அமைக்கப்ட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு, பேராசிரியர் பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகளை மூவர் குழு உறுதிப்படுத்தியது.  

அவர் மீது பல்கலைக்கழக விதிகளின்படி துறை ரீதியான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரை வழங்கியது. அதன் அடிப்படையில், பேராசிரியர் பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசின் கல்லூரி கல்வித்துறை இயக்குனரும், துணைவேந்தர்  நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளருமான சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.