Permission granted for Vijay's general body meeting in Puducherry 
தமிழ்நாடு

“புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி” - டிசம்பர் 9ஆம் தேதி உப்பளம் மைதானத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு!

கரூரில் நடந்த கூட்டத்தின் போது அதிக கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் தவெக மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...

Mahalakshmi Somasundaram

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று பிரச்சார கூட்டம் நடத்த திட்டமிட்டு மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக பிரச்சார கூட்டம் நடத்த நிலையில் (செப் 27) கரூரில் நடந்த கூட்டத்தின் போது அதிக கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் தவெக மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் இதற்கு முழு பொறுப்பையும் தமிழக வெற்றி கழகம் தான் ஏற்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது எனவே தவெக- வினர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் அப்போது உச்சநீதிமன்ற இதற்கு தமிழக வெற்றி கழகத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரியானது இல்லை என கூறி தீர்ப்பளித்தது மேலும் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு கண்டனமும் தெரிவித்தது.

இதற்கிடையில் விஜய் இறந்தவர்களின் குடும்பங்களை சந்திக்கவில்லை அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டு தனது வருத்தத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண தொகையையும் அறிவித்த விஜய் விரைவில் கரூர் செல்வதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் சில சட்ட சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு கருதி இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தவெக சார்பில் சென்னை அழைத்துவரப்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து விஜய் அவர்களை சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனி மேடைகள் அமைத்து ஒரு அரங்கத்தில் அல்லது மக்களுக்கு வசதியான இடங்களில் மட்டும் தான் தவெக-வின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த (நவ 23) ஆம் தேதி விஜய் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்க கூட்டமாக மக்களை சந்தித்து உரையாற்றியிருந்தார். இதனை தொடர்ந்து (டிச 05) ஆம் தேதி புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு கடந்த (நவ 26) தேதி டிஜிபி அலுவலகத்தி கடிதம் வழங்கப்பட்டது.

5 ஆம் தேதி ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 3 ஆம் தேதி வரையிலும் காவல்துறை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இது குறித்து ஆலோசனை செய்ததாக சொல்லப்படும் நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த கரூர் சம்பவத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அதற்கு மாறாக தனியாக மைதானம் போன்ற இடங்களில் கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்க பட்டிருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் (டிச 09) ஆம் தேதி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் விஜய் கலந்து கொள்ளும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை செயலகத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து இன்று காலை பெற்றுக் கொண்டார். மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கான வேலைகள் உப்பளம் மைதானத்தில் தமிழக வெற்றி கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.