தமிழ்நாடு

திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல்...!

Tamil Selvi Selvakumar

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் மேலும் 4 பேரின் ஜாமீன் மனுக்களை ரத்து செய்யக்கோரி வருமான  வரித்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்திய போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் மேலும் 4 பேருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இவர்களின் ஜாமீனை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, 4 பேரும் மற்றும் காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.