தமிழ்நாடு

வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை  அகற்றுங்கள்... நடிகர் மன்சூர் அலிகான் மனு...

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி மனு

Malaimurasu Seithigal TV

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வைத்த சீலை அகற்றக் கோரி மன்சூர் அலிகானின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள நடிகர் மன்சூர் அலிகான் வீடு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில் இந்த சீலை அகற்றக் கோரி அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தங்களுடைய அனைத்து உடைமைகளும்  வீட்டிற்குள் இருப்பதாகவும், வெளிநாட்டு இரண்டு பூனைகள் உணவின்றி தவித்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.