தமிழ்நாடு

கருணாநிதி தொடங்கிய இரவை பாசன திட்டத்தை.. நவீனமாக்க முதலமைச்சரிடம் மனு அளித்த விவசாயிகள்...!

Tamil Selvi Selvakumar

தஞ்சையில் இரவை பாசன திட்டத்தை நவீன முறையில் புதுப்பிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தும் வருகிறார். 

அந்த வகையில், இன்று திருவாரூரில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் பேருந்து நிலையத்துக்கான இடத்தை ஆய்வும் செய்தார். இந்நிலையில் மன்னார்குடியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஒக்கநாடு கீழையூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த இரவை பாசன திட்டத்தை, தற்போது 2 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நவீன முறையில் புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.