தமிழ்நாடு

அமைச்சர் பதவியிலிருந்து உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை நீக்க வேண்டி ஆளுநருக்கு மனு!!

Malaimurasu Seithigal TV

சனாதனத்திற்கு எதிராக உள்ள தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென  ஆளுநர் ஆர் என் ரவியிடம்  பாஜகவினர் புகார் மனு அளித்துள்ளனர் 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் தலைமையில் தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து "திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்களை பேசுவதும், அதே மேடையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்திருப்பதும், அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கும் பொழுது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்பதால் தமிழக ஆளுநர் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர் பாபு மீது அமைச்சர் பதவியில் இருந்து சட்டரீதியாக அவர்களை நீக்கம் செய்ய வேண்டும்" என ஆளுநரிடம்  புகார் மனு அளித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," டெங்கு மலேரியா போன்றது சனாதனம் அதை ஒழிக்க வேண்டுமென உதயநிதி பேசியுள்ளார். இந்து மக்களின் மனதை புன்படுத்தும். சனாதனமும் இந்துவும் வேறு வேறு இல்லை இரண்டும் ஒன்று தான். அவர், அமைச்சர்களாக பதவியேற்கும் போது விருப்பு வெறுப்பு காட்டமாட்டோம் என உறுதி மொழி எடுத்தனர், ஆனால் அதற்கு எதிராக மீறி செயல்படுவதால் ஆளுனரிடம் இருவரையும் அமைச்சர் பதிவியிகிருந்து  தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென புகார் மனு அளித்துள்ளோம்" என கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதால் தான், வட இந்திய சாமியாரும் வன்முறையை தூண்டும் அளவிற்ககு பேசியுள்ளார் என கரு நாகராஜன் கூறியுள்ளார்.