தமிழ்நாடு

விரைவில் ரூ.1000 வழங்கும் திட்டம்... அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் தனி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் முதலமைச்சர் துவங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுதுறை சார்பில் திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், தமிழ் வளர்ச்சி துறையை சிறப்பான துறையாக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் எனவும் கூறினார்.தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தமிழ்மொழியின் சிறப்பை வரும் தலைமுறையும் தெரிந்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 
இதனிடையே மதுரையில்  செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிதி நிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என குறிப்பிட்ட  எ.வ.வேலு, தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய்  வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.