தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி விளையாடி மீண்டும் ஒரு உயிர் பலி..! மணலியில் நடந்த சோகம்...!

மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி, கடன் சுமை தாங்காமல் மன உளைச்சலில் இருந்த நபர், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil Selvi Selvakumar

சென்னை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்த 37 வயதானவர் பெருமாள். பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்த இவருக்கு,  வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

 கடந்த ஆறு மாதம் காலமாக ரம்மி விளையாடி, அதில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சல் ஏற்பட்டு,    பெருமாள் அவரது மனைவி வரலட்சுமிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில்,  பெருமாள் பயன்படுத்தி வந்த செல்போனை,  அடகு வைத்து  விட்டு வந்ததால்,  அதை தட்டிக்கேட்ட மனைவியிடம் சண்டையிட்டு, நேற்று இரவு தூங்க சென்ற கணவரை, இன்று அதிகாலை பார்த்த போது, அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய படி இறந்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாடி மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.