pmk founder ramadoss 
தமிழ்நாடு

“இம்முறை எங்கள் கூட்டணி வித்தியாசமாக இருக்கும்” - பொடி வைத்து பேசிய ராமதாஸ்! அன்புமணிக்கு மீண்டும் ஆப்பா..!?

பெரியாரையும், அண்ணாவையும் இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவாக பேசக்கூடாது...

Saleth stephi graph

தைலாபுர செய்தியாளர் சந்திப்பு..! 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதுக்கு தீர்வு என்று ஒன்று இருக்க தானே செய்யும். ஆகவே பாமகவில் இப்போதுள்ள பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும். பாமகவை தொடர்ந்து 46 ஆண்டு காலமாக வழிநடத்தி வந்திருக்கிறேன்.  கட்சி, சங்கம் இரண்டையும் நான் வழி நடத்தி வருகிறேன். இந்த இரண்டின் மூலம் 34 அமைப்புகளை ஏற்படுத்தி திறம்பட வேலை செய்து வருகிறேன். அடுத்த ஆண்டு நாம் தேர்தலை சந்திக்க போகிறோம். அந்த தேர்தலில் நாம் மிக பெரிய வெற்றியை பெற போகிறோம். கூட்டணியை பற்றி இப்போது உங்களுக்கு சொல்ல கூடாது. கூட்டணி முடிவாகி விட்டதா என்று கேட்டால் கூட்டணி இன்னும் முடிவாக வில்லை. எங்கள் கூட்டணி நல்ல கூட்டணியாக, வித்தியாசமான கூட்டணியாக, வெற்றி பெறுகின்ற கூட்டணியாக இருக்கும். இங்கே வந்து இருக்கிறவர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறார்கள். இங்கு வந்து இருப்பவர்களை தான் (இந்த அணியில் நான்  நியமித்த ஆட்களைத்தான் சட்டமன்ற உறுப்பினராக்குவேன்) நான் தேர்ந்தேடுப்பேன். இங்கு இருக்கிறவர்கள் தான் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர். ஏன் என்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு, கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்லவர்கள், வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்குவேன். அது போக போக நடக்கும், போக போக உங்களுக்கு தெரியும் என்றார்.

தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருகர் மாநாட்டில் “அண்ணாவையும், பெரியாரையும் இழிவாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் “பெரியாரையும், அண்ணாவையும் இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவாக பேசக்கூடாது என பேசியிருந்தார்.

பாமக பூசல் ..!

கடந்த சில நாட்களாகவே பாமகவிற்கு நேரம் சரி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். இதுக்கா பாமக -வில் பெரும் பதற்றத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

கடந்த 2024 -ஆம் ஆண்டு ராமதாஸின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மேடையிலேயே அன்புமணி காட்டமாக பேசியிருந்தார். இதுதான் கட்சியின் பிரச்சனைக்கு துவக்கப்புள்ளி. அப்போது தொடங்கிய தந்தை - மகன் பூசல் இதுநாள் வரை நீடிக்கிறது. மேலும் ராமதாஸ் கட்சியிலிருந்து விலக்கும்  நிர்வாகிகளை எல்லாம்  அன்புமணி மறு நியமனம் செய்து வருகிறார். இதனால் தொடர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர். 

திமுக பக்கம் சாய்கிறாறாரா மருத்துவர்..!?

சில தினங்களுக்கு முன்பு பாமக -வில் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுக -தான் காரணம் எனக்குற்றச்சாட்டியிருந்தார். “ஆனால் அப்போதே ராமதாஸ், “அன்புமணி பச்சை பொய் பேசுகிறார்! இந்த பிரச்சனைகளுக்கும் திமுக -விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சாட்டியிருந்தார். இதன் மூலம் அவருக்கு திமுக -விடம் காட்டும் மென்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இன்று மீண்டும் “பெரியார் மற்றும் அண்ணாவை இழிவுபடுத்துவது தவறு”.. இம்முறை எங்கள் கூட்டணி வித்யாசமாக அமையும்” என்றெல்லாம் பேசியுள்ளார். இதன் மூலம் திமுக -வுடன் நெருக்கம் காட்டுவதாக பேச்சுக்கள் எழுகின்றன. திமுக -வை தீவிரமாக எதிர்த்து வரும் அன்புமணிக்கும் அதிமுக பாஜக கூட்டணிக்கும் இது பெரும் பின்னடைவாக அமையலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.