தமிழ்நாடு

ஜிப்மர் மருத்துவமனையை கண்டித்து பாமக போராட்டம்!

புதுவை மக்களுக்கு முறையாக சிகிச்சை வழங்க மறுப்பதை கண்டித்தும் மற்றும் தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மருத்துவமனை முன்பு பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு

 இந்த ஜிப்மர் மருத்துவமனையில் சமீப காலமாக மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மொழி புறக்கணிப்பு

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்தும், புதுவை மக்களுக்கு முறையாக சிகிச்சை வழங்க மறுப்பதை கண்டித்தும் மற்றும் தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மருத்துவமனை முன்பு பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பாமக அமைப்பாளர் கணபதி தலைமையில் 200க்கும் மேற்பட்ட பாமகவினர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.