தமிழ்நாடு

தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஜான் பாண்டியனை தேடி வரும் காவல்துறையினர்...

கோவையில் நிலத்திற்காக தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்  தலைவர் ஜான் பாண்டியனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Malaimurasu Seithigal TV

வடவள்ளி பகுதியை சேர்ந்த தீபக் அரோரா துருவ் என்டர்பிரஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தீபக் அரோராவும் அவரது மனைவி பிரியா அரோராவும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் நிலையில், தனது கணவனை மிரட்டுவதற்காக, பிரியா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை அணுகியுள்ளார். இதையடுத்து தீபக்குடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜான் பாண்டியன் தரப்பு, அதற்கு பதிலாக பிரியா அரோராவிடம் இருந்து நான்கரை செண்ட் நிலத்தை எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இடத்தில் தீபக் அரோரா நடத்தி வந்த குடோனை காலி செய்ய ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தீபக் அரோரோ காலி செய்ய மறுத்ததால் நேற்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த தீபக் அரோரா காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் 7 பேரைக் கைது செய்த காவல்தூறையினர் தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.