தமிழ்நாடு

வேகக்கட்டுபாட்டை மீறிய 120 பேர் மீது வழக்குப்பதிவு... ஒரே நாளில் குவிந்த வசூல்!

Malaimurasu Seithigal TV

சென்னையில் வேகக் கட்டுப்பாட்டை மீறிய 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர கூடுதல் போக்குவரத்து ஆணையாளர் சுதாகர், சென்னையில் விபத்துகளை தடுக்கவே வேக வரம்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையான ஆய்வுக்கு பிறவே வேக வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

ஸ்பீட் ரேடார் கன் மூலம் வாகனங்களை கண்காணித்து வேகக் கட்டுப்பாட்டை மீறியதாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் சுதாகர் தெரிவித்தார்.  

அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டப்பிறகே கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆணையாளர் சுதாகர், பெரும்பாலானோர் வேக கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்த ஆதரவு தெரிவித்தததாக கூறினார்.

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருநகர கூடுதல் போக்குவரத்து ஆணையாளர் சுதாகர் எச்சரித்தார்.