தமிழ்நாடு

பொங்கல் - சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து வருவதால் மக்கள் அவதி..!

Malaimurasu Seithigal TV

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால், தாம்பரம் ஐஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேறறைய தினம் அதற்கு முன்தினம் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு அரசு பேருந்து மூலமும் தனியார் பேருந்துகள் மூலமாகவும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அடைந்தனர்..

இந்த நிலையில் தற்போது தாம்பரம் சானிடோரியம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுப்பு  நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் இருப்பவர்கள் தங்கள் சொந்தங்களுக்கு தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதால் இந்த புறநகர் பகுதியான தாம்பரத்தில் தற்போது போக்குவரத்து பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது .தாம்பரத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஆமை வாகத்தில் நகர்ந்து வருகிறது.