நெல்லை: மேற்குத்தொடர்ச்சி மலையில் இஞ்சிக்குழி என்ற மலைக்கிராமம் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் 24 பேர் மட்டுமே உள்ளன. இவர்களை தொடர்பு கொள்ள, பேருந்து, தொலைத் தொடர்பு போன்ற எந்த வசதியும் இல்லை. இந்நிலையில், இங்குள்ள 110 வயது மூதாட்டிக்கு அரசின் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகையை வழங்குவதற்காக பாபநாசம் அப்பர் டேம் தபால் நிலையத்தில் பணியாற்றும், கிறிஸ்துராஜா என்ற தபால்காரர் படகு மூலம் சென்று பின்னர் 10 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் சென்று உதவித் தொகை வழங்கி வருகிறார்.
மேலும் படிக்க | ஆயிரம் பேரைத் தோற்கடித்த சென்னை அழகன் ஸ்ரீலோகானந்த்...ஆயிரம் பேரைத் தோற்கடித்த சென்னை அழகன் ஸ்ரீலோகானந்த்...
இவரது சேவை குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் விரிவான செய்தித் தொகுப்பு வெளியானது. இதனால் இவரது சேவை வெளிச்சத்திற்கு வந்தது. இவரது சேவையை பாராட்டி கிராமிய சேவைக்கான உயரிய விருதான "டாக் சேவா" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமானால் நேரடியாகவோ, தபால் மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள் என்பவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாடு பெயர் சூட்ட தன்னுயிர் தந்த சங்கரலிங்கனார்!
இந்த உதவித்தொகையை வழங்குவதற்காக பாபநாசம் அப்பர் டேம் தபால் நிலையத்தில் பணியாற்றும், அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்து ராஜா என்ற தாபால்காரர் காரையார் அணையை படகு மூலமாக கடந்து, அங்கிருந்த சுமார் 10 கிலோ மீட்டர் அடர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று உதவித்தொகையை வழங்கி வருகிறார்.
இவரது இந்த பணி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது என்றே சொல்லலாம், இந்த சேவைக்காக மாவட்ட நிர்வாகம் உள்பட சில அமைப்புகள் அவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து இருந்தனர்.
மேலும் படிக்க | பாலிவுட் மெகா ஸ்டாருக்கு இன்று 80வது பிறந்தநாள்.. தலைவர்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து..!
இந்த நிலையில் கடந்த 10 -ந் தேதி தபால் துறை சார்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த சேவையை பாராட்டி கிறிஸ்து ராஜாவை கவுரவிக்கும் விதமாக தபால் துறையில் கிராமிய சேவைக்கான உயரிய விருதான டக் சேவா விருது வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அம்பையில் உள்ள தபால்துறை தலைமை அலுவலகத்தில் கிறிஸ்து ராஜாவை அம்பை தபால்துறை உதவி சூப்பிரண்டு பாலாஜி சால்வை அணிவித்து பாராட்டினார். இதுதொடர்பாக கிறிஸ்து ராஜா கூறுகையில், இந்த விருது வழங்கிய தபால் துறை தலைமை அதிகாரிகளுக்கு மிக்க நன்றி என்றார்.
மேலும் படிக்க | சென்னை: 2ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி...திறந்து வைத்த முதலமைச்சர்!