தமிழ்நாடு

தலைமைச் செயலக வாயிலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி....!!

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பத்தை சேர்ந்த தம்பதியர் தங்கள் மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து தலைமைச் செயலக வாயிலில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி சிறுவனின் பெரியப்பா போலி மருத்துவரிடம் அழைத்து சென்று சிறுவனுக்கு ஊசி போட வைத்ததாகவும், ஊசி போடுவதற்கு முன்பு உடல் அளவிலான குறைபாடு மட்டும் இருந்த நிலையில் தற்போது மனதளவிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட அவர்களை உடனடியாக காவல்துறையினர், விசாரணைக்காக ஆட்டோவில் ஏற்றி சென்றனர் .

காவல்துறையினரிடமும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தீக்குளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.