தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் தடை...2 மணி நேரம் அவதிகுள்ளான நோயாளிகள்!

Tamil Selvi Selvakumar

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பால் சுமார் 2 மணி நேரம் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனை அருகே மின்கம்பம் மாற்றும் பணி நடைபெற்று வருவதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அத்துடன், ஜெனரேட்டர் பழுது காரணமாக மின் விநியோகம் இல்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.