dharmendra prathan 
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்..! “முட்டாள் தனமாக செயல்படுகிறார்கள்..” - தர்மேந்திர பிரதான் தாக்கு!!

இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கத்தோடு செயல்பட நினைத்தால் மக்கள் ...

மாலை முரசு செய்தி குழு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர் ராம.ரவிக்குமார் திருப்பரங்குன்றத்துக்கு வந்தார். அதே நேரத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர், இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்துக்கு வந்தனர். அப்போது, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். அதற்கும் போலீஸார் அனுமதி மறுத்தனர்.

மேலும் இஸ்லாமியரும் இந்துக்களும் சகோதர உணர்வுடன் பழகி வரும் அப்பகுதியில், பாஜக, ஆர்எஸ்எஸ் கலவரத்தை தூண்ட முயலுவதாக பலரும் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் நோக்கத்தோடு செயல்பட நினைத்தால் மக்கள் அதை எதிர்ப்பார்கள் என்றும் முட்டாள்தனமான பரப்புரைகளை மேற்கொள்பவர்களுக்கு கடவுள் பாடம் புகட்டுவர் என்றும் மதுரையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," பிரதமர் மோடி கலை, பண்பாடு, கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். புதிய கல்விக் கொள்கையில் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியதும் கொடுக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கத்தோடு செயல்பட நினைத்தால் மக்கள் அதை எதிர்ப்பார்கள்.தமிழ்நாட்டில் சிவனும், மீனாட்சியம்மனும் இல்லை என்று மறுக்க முடியுமா? தமிழ் இலக்கியமும், கலாச்சாரமும் இல்லை என்று மறுக்க முடியுமா? திருக்குறள் இல்லை என்று மறுக்க முடியுமா? இது போன்று முட்டாள்தனமான பரப்புரைகளை மேற்கொள்பவர்களை கடவுள் பாடம் புகட்டுவார்" என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.