chengalpattu 
தமிழ்நாடு

செங்கல்பட்டில் புதிய வேட்பாளர் வியூகம் பலிக்குமா? திமுக - அதிமுக இடையே அனல் பறக்கும் போட்டி!

ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு...

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகத் திகழும் இந்தத் தொகுதி, நகர்ப்புற வளர்ச்சியும் கிராமப்புறத் தேவைகளும் கலந்த ஒரு சவாலான களமாகும். மூன்று நகராட்சிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில், தற்போது நிலவும் அரசியல் சூழல் மாற்றத்தை விரும்புவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

செங்கல்பட்டு தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களாக 41 முதல் 60 வயதுடையவர்கள் 40.1 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 32 சதவீதமும் உள்ளனர். சமூக ரீதியாக வன்னியர்கள் 22 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும், முதலியார்கள் 16 சதவீதமும் உள்ளனர். நாயுடுக்கள் மற்றும் யாதவர்கள் தலா 8 சதவீத அளவில் உள்ளனர். 71 சதவீத நகர்ப்புற வாக்குகளைக் கொண்ட இந்தத் தொகுதியில், படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் மிக முக்கியமானவை.

செங்கல்பட்டு தொகுதியின் முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் நவீன வசதிகள் இல்லாதது சுட்டிக்காட்டப்படுகிறது. ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது போன்ற புகார்களை மக்கள் முன்வைக்கின்றனர். முறையற்ற வடிகால் அமைப்பால் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் வழிந்தோடுவது பெரும் அவலமாக உள்ளது.

தேர்தல் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், 2021-ல் திமுக 48.5 சதவீத வாக்குகளைப் பெற்றது, அது 2024-ல் 51.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக 2021-ல் 38.3 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024-ல் 36 சதவீதமாகச் சரிந்துள்ளது. பூத் அளவில், 2021-ல் திமுக 140 பூத்களில் வலுவாக இருந்தது, 2024-ல் அது 124 ஆகக் குறைந்துள்ளது. அதிமுக 2021-ல் 92 பூத்களில் வலுவாக இருந்த நிலையில், 2024-ல் 91 பூத்களாகத் தக்கவைத்துள்ளது. சுமார் 29 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

2026 தேர்தல் கணிப்பின்படி, செங்கல்பட்டில் திமுக 116 வாக்குச்சாவடிகளில் வலுவாக உள்ளது. அதிமுக 90 வாக்குச்சாவடிகளில் தனது பலத்தைக் கொண்டுள்ளது. சுமார் 75 வாக்குச்சாவடிகள் ஸ்விங் பூத்களாக உள்ளன. கான்சிலிடிக்ஸ் குழுவின் முடிவுகளின்படி, 2026-ல் அதிமுக 30 சதவீத வாக்குகளைப் பெறும் எனத் தெரிகிறது. திமுக 36 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 27 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. வெற்றி வித்தியாசம் சுமார் 5 முதல் 6 சதவீதமாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.