தமிழ்நாடு

தரைப்பாலம் உடைந்ததால் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆற்றை கடந்த கர்ப்பிணி...

தரைப்பாலம் உடைந்ததால் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆற்றை கடந்த கர்ப்பிணி

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டியப்பனூருக்கும் பாப்பாத்தி அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ள தரைப்பாலம்  வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்து உடைந்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொதுமக்கள் எந்த ஒரு அத்தியாவசிய தேவைக்கும் இந்த தரைப்பாலத்தை கடந்துதான் ஆண்டியப்பனூர் வர வேண்டும் என்கிற சூழ்நிலையில், ஆண்டியப்பனூர் அடுத்த பாப்பாத்தி அம்மன் கோயில் பகுதியில் தன் தாய் வீட்டிற்கு இரண்டாவது குழந்தை  பிரசவத்திற்காக சென்ற கூலி வேலை செய்யும் ராமச்சந்திரனின் மனைவி சங்கீதா (25) என்கிற கர்ப்பிணிப் பெண்  கர்ப்பகால பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல்  அவதிப்பட்டு உள்ளார். 

இந்நிலையில் செய்வதறியாது திகைத்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஜேசிபி கனரக இயந்திரத்தின் மூலமாக வெள்ளத்தில் உடைந்த தரை பாலத்தை கடந்து   கர்ப்பிணிப் பெண் சங்கீதாவை  ஆண்டியப்பனூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.