தமிழ்நாடு

குடும்பத் தகறாரில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை..!

பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார்..!

Malaimurasu Seithigal TV

அரியலூர்  அருகே 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அன்புமணி- சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்கு, திருமணமாகி, 5 ஆண்டுகள் ஆன நிலையில், 8 மாத பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சகுந்தலா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சகுந்தலாவின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.