தமிழ்நாடு

மாணவியர், ஆசிரியர்களுக்கு சிக்கல் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Suaif Arsath

கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலம் ஆசிரியர்களுக்கும் மாணவியருக்கும் ஏற்பட்டுள்ள இன்னல்களை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலம் மாணவ, மாணவியரின் உணவு விவரங்கள், சுகாதாரத் தகவல்கள், பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்களை எல்லாம் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு மாணவியரிடமும், ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்கள் கேட்கப்படுவதை தவிர்க்கவும், ஆசிரியர்களின் கூடுதல் சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.