தமிழ்நாடு

பக்கோடாவில் கிடந்த சொத்தைப்பல்....வலைதளத்தில் வைரலாகும் வீடியோ....!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே  பேக்கரியில் வாங்கிய பக்கோடாவில் சொத்தைப்பல் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள ஒரு பேக்கரி கடைக்கு சென்ற கொளஞ்சி என்பவர், சாப்பிடுவதற்காக பக்கோடா கேட்டுள்ளார், கடை ஊழியர்களும் பக்கோடாவை பேப்பரில் வைத்து அவரிடம் சாப்பிட கொடுத்துள்ளனர்.

பக்கோடாவை வாங்கிய கொளஞ்சியும், அதனை சாப்பிட ஆரம்பித்துள்ளார். அப்போது ஏதோ ஒன்று வித்தியாசமான வாயில் தட்டுப்பட்டுள்ளது. என்னவென்று எடுத்து பார்த்த கொளஞ்சிக்கு காத்திருந்தது அதிர்ச்சி, ஆம் அந்த பக்கோடாவில் சொத்தை பல் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து கடை விற்பனையாளரிடம் கொளஞ்சி கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் சரியான பதில் கூறாமல், தர குறைவாக பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.