தமிழ்நாடு

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 35,554 பேர் மீது வழக்குப்பதிவு...

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவை சார்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி சட்டமன்ற தேர்தலுக்கு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பல்வேறு பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வன்னியர்கள் உள்ஒதுக்கீடு போராட்டத்தில் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டி.ஜி.பி. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி போராட்டங்களில் ஈடுபட்ட பா... மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த 35 ஆயிரத்து 554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் டி.ஜி.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.