தமிழ்நாடு

2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்...!

Tamil Selvi Selvakumar

விழுப்புரத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணவில்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.

அதேசமயம், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு விரோதமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டிற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நகலை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.