தமிழ்நாடு

செந்தில் பாலாஜி கைது எதிரொலி: பாஜகவிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!

Tamil Selvi Selvakumar

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்த திமுகவினர், ஆளும் பாஜகவிற்கு எதிராக இன்று கோவையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி, கோவை சிவானந்த காலனி பகுதியில் இன்று நடைபெற உள்ள மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக  மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.