தமிழ்நாடு

தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்....ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் குளித்து மகிழும் மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில்  உள்ள தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில், ஆபத்தை உணராத, மக்கள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருவள்ளூர் மாவட்டம் கூவம் ஆற்றில் அதிகளவு நீர் சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் கூவம் ஆற்றின்  பிஞ்சிவாக்கம் பகுதியில்  உள்ள தடுப்பணையில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால் தடுப்பணையில் அருகே குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள், பெண்கள் இளைஞர்கள் என கூட்டம் கூட்டமாக ஆபத்து அறியாமல் குளித்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி ஆற்றில் தண்ணீர் செல்வதை காண திருவிழாவிற்க்கு வந்தவர்கள் போல் உணவு கட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக ஆற்றின் அருகே அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி  வருகின்றனர்.

ஒரு சில இளைஞர்கள் ரப்பர் டியூப்  மீது அமர்ந்து ஆற்றில் படகு சவாரி செய்வது போல் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் கூவம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படும் முன் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.