வானிலை மையம் எச்சரிக்கை
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் வடதமிழக கடலோரப் மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கிடையில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றின் வேகம் குறைந்தபட்சமாக 65 கி.மீ முதல் அதிகபட்சமாக 75 அல்லது 85 கி.மீ வரை கூட இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அறிவுறுத்தல்
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தொடர் மழை மற்றும் அதிகரித்து வரும் காற்றின் வேகம் காரணமாக தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், மிகவும் அவசியமான தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!