தமிழ்நாடு

மயான பாதை இன்றி பொதுமக்கள் தவிப்பு - உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மயான பாதை இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மயான பாதை இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

செய்யாறு ஒன்றியம் பாராசூர் மதுரா, காலனியில் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு முனியம்மாள் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலை பாராசூர் காலனி வழியான எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர்.

இதன் காரணமாக அங்குள்ள, ஓர் வயல் வழி பாதையில் உடலை எடுத்துச் சென்றனர். மேலும் தங்கள் பகுதி மக்களுக்கு உரிய மயான பாதை அமைத்து தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.