தமிழ்நாடு

இளநிலை மருத்துவ நீட் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியீடு.!!

இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான முதல் கட்ட கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 24 ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி வரை இருக்கை ஒதுக்கீடு செயல்முறை நடத்தப்படும் என்றும் மேலும் முதல் கட்ட இட ஒதுக்கீடு முடிவுகள் ஜனவரி 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.