தமிழ்நாடு

இலவசமாக பயணிக்கும் குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்!

Tamil Selvi Selvakumar

அரசு பேருந்துகளில் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இலவசமாக பயணிக்கும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சட்ட சபையில் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 5-ம் தேதி முதல் குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் இனி வரும் நாட்களில்  இலவசமாக பயணிக்கும் குழந்தைகளின் விவரங்களை போக்குவரத்து அறிக்கையில் பதிவு செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்து.