பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்ட இளங்குமரனார், வயது மூப்பு காரணமாக தமது 94-வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளங்குமரனார் மறைவு தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என கூறியுள்ளார்.
இளங்குமரனார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துவதாக தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்றாலும், ஈடுபாட்டாலும் நிறை வாழ்வு வாழ்ந்த இளங்குமரனாரின் புகழ் என்றென்றும் வாழ்க என கூறியுள்ளார்.