தமிழ்நாடு

சாலையோரத்தில் உயிருடன் வீசப்பட்ட காடை குஞ்சுகளால் பரபரப்பு..! விரைந்து அகற்ற கோரிக்கை வைத்த மக்கள்...

திண்டுக்கல் - கரூர் தேசிய நான்கு வழிச்சாலையில் உயிருடன் வீசப்பட்ட காடை குஞ்சுகளை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள ரங்கமலை என்னும் இடத்தில் திண்டுக்கல் கரூர் தேசிய நான்குவழிச் சாலையின் ஓரமாக சுமார் 2000 க்கும் மேற்பட்ட காடைக்குஞ்சுகள் உயிருடன் இருப்பதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டது. பின்பு உயிருடன் இருந்த காடை குஞ்சுகளை அங்கு வந்த பொதுமக்கள் சிலர் கொண்டு சென்றனர். 

மேலும், இந்த 2000 காடைக்குஞ்சுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார், எதனால் இந்த பகுதியில் வீசி சென்றனர் என்பது தெரியாததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நோய் பரவல் காரணமாக வீசி சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதுவரை சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால்  காடை குஞ்சுகள் அதே பகுதியில் அலைந்து கொண்டிருக்கிறது.

உயிருடன் இருக்கும் அந்த காடை குஞ்சுகளை, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.