தமிழ்நாடு

IFS நிதி நிறுவன உதவியாளர் ஜெயநாதன் வீட்டில் ரெய்டு...!ஆதரவாளர்களால் நிகழ்ந்த பரபரப்பு!!

Tamil Selvi Selvakumar

IFS நிதி நிறுவன உதவியாளர் ஜெயநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த IFS நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள நிதி நிறுவன உதவியாளர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நெமிலியில் உள்ள ஜெகநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவரது ஆதரவாளர்கள் 2 பேர் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.