ஆதவ் அர்ஜுனா பேச்சு உண்மைக்கு மாறானது! ஆதரவு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி..
தவெக கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சை பேச்சுக்களில் சில்க்கி வருகிறார். கடந்த வாரம் தவெக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆதவ் திமுக விற்கு எதிராக கண்டன உரையாற்றினார். அப்போது நடிகர் ரஜினி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். நடிகர் ரஜினி அவர்களின் அரசியல் வருக பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் ஆதவ்-ன் பேச்சுக்கு கண்டம் தெரிவித்து வந்தனர். அதாவது “திமுக கொடுத்த பயத்தால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை” என்று கூறியிருந்தார்.
தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “ஆதவ் அர்ஜுனா பேச்சு உண்மைக்கு மாறானது” மேலும் "எனக்காக ஆதரவு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனவும் ஆதரவு குரல் கொடுத்த அரசியல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” எனவும் தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
தவெக கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா - வின் பேச்சை பல அரசியல் தலைவர்களும் எதிர்த்தும் ரஜினிக்கு ஆதரவாகவும் கருது தெரிவித்து வந்தனர். தமிழக அமைச்சர் சே.ரகுபதி அவர்கள் “ரஜினியை யாராலும் மிரட்ட முடியாது. அவர் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டார்” எனவும் ஆதரவு குரல் கொடுத்திருந்தார். அதனையடுத்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் “ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது” எனவும் “ வலதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருவதை தீர்க்கமாக உணர்ந்து ரஜினி அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார்” எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் ரஜினிகாந்துடனான தனது புகைப்படத்தை பகிர்ந்து "அரசியலை கடந்து அனைவரும் மதிக்க பட வேண்டும் , ரஜினிக்காந் மிக சிறந்த திரை ஆளுமை எனவும் புகழ்த்தார். தவெக தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறாக பேசியிருப்பது ஏற்கத்தது இல்லை" எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற ஆளுமையான நடிகர் ரஜினிகாந் அவர்களின் அரசியல் வருகையை தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு காலம் எட்டப்படாத நிலையில் ரசிகர்கலின் எதிர்பார்ப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அரசியல் வருகையை தாண்டி ரஜினிகாந்த எல்லோராலும் விரும்பப்படும் மற்றும் மதிக்கப்படும் மனிதராகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தவெக ஆதவின் இந்த கருத்து ஏற்று கொள்ள முடியாது என்று பலரும் எதிர்ப்பு கருது தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தனது பாணியில் பதிலளித்துள்ளார். மேலும் “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” எனும் பதிலில் ட்விஸ்ட் இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.