super star Admin
தமிழ்நாடு

தமிழக மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்! ஏன் ?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Anbarasan

மலேசியாவுக்கான கல்விச் சுற்றுலா பயணம் மேற்கொண்ட அரசு பள்ளி மாணவர்களை நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதனை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.

நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம். அப்போது "மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம்.

அவ்வகையில் இது 8வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் அவர்கள்.

"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம்