தமிழ்நாடு

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை.. 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Suaif Arsath

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, 3வது பிளாக்கில் உள்ள 2 ஆயிரத்து 99 அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருபது 108 அவசர கால வாகனங்கள் ச் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், செங்கல்பட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.