தமிழ்நாடு

தொடங்கியது ரமலான் நோன்பு...!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு இன்று தொடங்கிய நிலையில் சென்னையில்  இன்றைய தினம், அதிகாலை தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பினை தொடங்கினர்.

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது.  ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.  ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இந்த நோன்பு நாட்களில் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவது வழக்கம்.

சவூதி அரேபியாவில் நேற்றைய தினம் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் ஒருநாள் கழித்து ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பெரிய மசூதியில் இன்று அதிகாலை 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் மாத நோன்பின் முதல் நாள் தொழுகையில் ஈடுபட்டனர்.