ramadas 2nd anniversary  
தமிழ்நாடு

பாமக -வில் இருந்த மூன்றாம் நபர் தலையீடு இவர்தானா!? சர்ச்சைக்குள்ளான ராமதாஸின் 50 -ஆவது திருமண நாள் கொண்டாட்டம்!!

மீபத்தில்தான் தனது முதல் மனைவி சரஸ்வதியுடன் 60 -ஆவது திருமண நாளை ..

மாலை முரசு செய்தி குழு

பாமக நிறுவனர் ராமதாசுக்கு 2 மனைவிகள் உள்ளனர். பெரும்பாலும் அவரின் இரண்டாவது மனைவி சுசிலா வெளி உலகிற்கு பரிச்சயப்படுத்தப்படாதவர். சமீபத்தில்தான் தனது முதல் மனைவி சரஸ்வதியுடன் 60 -ஆவது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தார் நிறுவனர். 

சென்னையில்  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான கால்டன் சமுத்திரா ஓட்டலில் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசிலாவுடன்  50ஆவது திருமண நாளை வெகு விமரிசையாக கொண்டாடி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட சுசிலாவின் உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். ஆனால் ராமதாஸ் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. 

மூன்றம் நபர் தலையீடு 

ராமதாஸுக்கு அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் வலுத்து வருகிறது. இந்த மோதல்களுக்கு எல்லாம் காரணம் கட்சியிலும் வீட்டிலும் மூன்றாம் நபர் தலையீடு இருந்ததாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அந்த 3 -ஆம் நபர் சுசீலா தான் என தற்போது பேசப்பட்டு வருகிறது. அன்புமணி கட்சியை கைப்பற்றி வழிநடத்தி வரும் இந்த சூழலில் இப்படி ஒரு  நிகழ்ச்சியை ராமதாஸ் நடத்தியிருப்பதை பார்த்து பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். கடந்த 45 ஆண்டுகாலமாக மறைத்து வைத்திருந்த இந்த சம்பவம் இப்பொழுது பகிரங்கமாக பொதுவெளியில் தெரியப்படுத்துவதன் மூலம் டாக்டர் ராமதாஸ் என்ன செய்ய முனைகிறார் என்பதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

யார் இந்த சுசீலா!

ராமதாஸ் பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னர் திண்டிவனத்தில் மருத்துவராக வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கு உதவியாளராக வேலைக்கு சேந்தவர் தான் சுசீலா.  16 வயதில் ராமதாஸ் கிளினிக் -ல் வேலைக்கு சேர்ந்த சுசீலாவின் சுறுசுறுப்பும், அன்பும் ராமதாஸ் -க்கு அவர் மீது காதலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சுசீலா ராமதாஸ் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.