2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் திமுக தேர்தல் பணிகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் இலக்கு வைத்து திமுக தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதற்காக திமுக தொடர்ந்து உழைத்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது மீண்டும் கூட்டணியை அமைத்து இருக்கிறது. இந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியின் பலவீனம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும் திருபுவனம் அஜித் குமார் மரணத்தை தொடர்ந்து பாஜக-அதிமுக கூட்டணி வெளிப்படையாக தங்களின் ஒற்றுமையை நிரூபித்துள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் பல முரண்களை தற்போது வெளிப்படையாக பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் செயலாளர் பெ.சண்முகம் “திமுக -வின் வெற்றி வாய்ப்பு.. விஜய் எடுத்து வைக்கும் நகர்வுகளை பொறுத்தது” என பேசியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் நிலவும் சர்ச்சை பொது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செல்வப்பெருந்தகை வியூகம்
தற்போது மதிமுக உள்ளிட்ட சில காட்சிகள் திமுக -விலிருந்து வெளியேறினாலும், பாமக -வை திமுக உடன் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை ஈடுபட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார், அவர் மரியாதையை நிமித்தமாக தான் சந்தித்ததாக கூறினாலும் அது அரசியல் ரீதியான சந்திப்பு தான் என விமர்சகர்கள் பலர் கூறியிருந்தனர்.
ஆனால் ராமதாஸை சந்தித்த பிறகு செல்வப்பெருந்தகையின் பேச்சு பாமக -திமுகவில் இணைவதையே பிரதிபலிக்கிறது. சமீபத்தில் "2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்" என செல்வப்பெருந்தகை பேசியிருந்தார்.
ஆனால் இவரின் இந்த பேச்சு ‘தன்னிச்சையானது அல்ல… திமுக -வின் ஆசீர்வாதம் இல்லாமல் நடைபெறாது. தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் அவர்கள் ராமதாஸை பார்க்க செல்வப்பெருந்தகையி அனுப்பி வைத்தனர்” என்கிறார் பத்திரிகையாளர் மணி.
திருமாவை இழிவுபடுத்துகிறதா திமுக!?
கூட்டணி கட்சி என்றுதான் பெயர். ஆனால் ஆளும் திமுக திருமாவளவனை மோசமாக நடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ‘பாசிச பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளிக்காக அவர் பலவற்றையும் சகித்துக்கொண்டுள்ளார் என கட்சியினர் வருத்தம் தெரிவித்து வருகின்றன.
பாமக வில் ஏற்கனவே ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் தந்தை -மகன் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தி எட்டிவிட்டதாக தெரிகிறது. ஒன்றுபட்ட பாமக என்றில்லாமல், ராமதாஸ் பாமக அன்புமணி பாமக என்று பிரிந்தால் ராமதாஸ் நிச்சயம் திமுக -உடன் சேர முயற்சிப்பார். அந்த சூழலை திமுக எப்படி கையாளும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்வியாக உள்ளது. என்ன ஆனாலும் பாஜக, பாமக இருக்கும் கட்சியில் விசிக இருக்காது என உறுதிபட கூறியுள்ளார். தற்போது திருமாவை ஸ்டாலின் எப்படி சமாளிக்கப்போகிறார் என்ற மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.