தமிழ்நாடு

சாலையில் ஊர்ந்து சென்ற அரிய வகை பச்சைப் பாம்பு

உதகை அருகே சாலையை கடந்து சென்ற அரியவகை பச்சைப்பாம்பை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

Malaimurasu Seithigal TV

உதகை அருகே சாலையை கடந்து சென்ற அரியவகை பச்சைப்பாம்பை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள 36 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  5 அடி நீளமுள்ள அரியவகை பச்சை பாம்பு ஒன்று ஊர்ந்தபடி சாலையை கடந்து சென்றது.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே இருந்த இந்த பச்சை பாம்பு பின்பு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.