தமிழ்நாடு

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அரிய பொருட்கள்!

Malaimurasu Seithigal TV

சாத்தூர்: 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் சுடுமண் பதக்கம் மற்றும் சங்கு வளையல் கண்டெடுப்பு

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள், இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடுமண் வணிக முத்திரை,  சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி,  யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர். 

இந்நிலையில், தற்போது சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்ட பதக்கம் மற்றும் சங்கு வளையல் ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர். சுடுமண் பதக்கத்தை, பெண்கள் கழுத்தில் அணியும் அணிகலனாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 2ம் கட்ட அகழாய்வில், பெண்கள் அணியும் தங்க அணிகலன் உள்ளிட்ட பல்வேறு வடிவ அணிகலன்கள் கண்டெடுக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.