தமிழ்நாடு

வேனில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்!

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகேயுள்ள தைலாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வானூர் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வானூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் இரண்டு தனி வருவாய் ஆய்வாள்கள் குழுவினருடன், அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, தைலாபுரம் சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை மடக்கினர். அதில் இருந்த டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த வேனை சோதனை செய்ததில், 102 வெள்ளை நிற சாக்கு மூட்டையில், மொத்தம் 5,100 கிலோ 5டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் வட்ட வழங்கல் அதிகாரிகள் வேனுடன், 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஆரோபுட் அருகேயுள்ள தாணிய கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், வேன் யாருடையது, தப்பியோடி நபர் குறித்தும், எந்த பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.