திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டார இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் செங்குன்றம் அருகே வடகரையில் உள்ள கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கிடங்கு ஒன்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 5.8டன்(5,800 கிலோ) ரேஷன் அரிசியையும், அரிசி கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்த முயன்ற தண்டையார்பேட்டையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.