தமிழகம் முழுவதும் இன்று அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு தொடங்கியது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த நவம்பர்-டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்ற நிலையில், அதற்கான மறு தேர்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி - மார்ச் மாத செமஸ்டரில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக மறு தேர்வு நடத்தப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு Open Book முறையில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முடிந்த உடன், விடைத்தாள்களை Scan செய்து PDF வடிவில் அனுப்பி வைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசல் விடைத்தாளையும் விரைவு அஞ்சல் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.